10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் தேக்கம்- இறைச்சி விலை குறையுமா?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல்லடத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கறிக்கோழி பண்ணை தொழில் பிரதானமான உள்ளது. தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்கு, கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக கறிக்கோழி பண்ணையில் உற்பத்தி குறைந்துள்ளது. சோயா, மக்காசோளம், கருவாடு, புண்ணாக்கு ஆகிய மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக கோழிகளுக்கான தீவனங்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் பண்ணைகளில் சுமார் பத்து லட்சம் கிலோ கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளன.

பெரும்பாலான கறிக்கோழி உற்பத்தியாளர்கள், தங்களது பண்ணைகளில் 60 சதவீதம் அளவிற்கு உற்பத்தியை குறைத்துள்ளனர். கடந்த வாரம் 91 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயிருடன் இருக்கும் கறிக்கோழி, தற்போது 61 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.