அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1.12 கோடி மதிப்பிலான தங்கள் பறிமுதல்...!

அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 1 கோடியே 12 லட்சம் மதிப்புடைய  தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1.12 கோடி மதிப்பிலான தங்கள் பறிமுதல்...!

அபுதாபியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த, ஆண் பயணி ஒருவா் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததால், அவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டாா். இருப்பினும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்ந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது உடமைக்குள் காபி மேக்கா் மிஷின் ஒன்று  இருந்தது. அந்த மிஷினை கழற்றி பாா்த்து சோதித்தனா். அதனுள் உளுளை வடிவில் தங்கப்பசை உருண்டை இருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். அதன் எடை 2.6 கிலோ.அதன் மதிப்பு ரூ.1. 12 கோடி என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ராமநாதபுரம் பயணியை கைது செய்தனா். அதோடு கடத்தி வரப்பட்ட ரூ.1.12 கோடி மதிப்புடைய 2.6 கிலோ  தங்கப்பசையையும் பறிமுதல் செய்தனா்.மேலும் கைது செய்யப்பட்ட பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர், கடத்தல் குருவி என்றும், இவரை கடத்தலில் ஈடுபடுத்தியவா்கள் சென்னையை சோ்ந்த பிரபல கடத்தல் ஆசாமிகள்  என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட பயணியை வைத்து கடத்தல் ஆசாமிகளை  இருவரிடமும் பேசவைத்து, சென்னை விமானநிலையத்திற்கு வரவழைத்தனா். அதன்படி விமானநிலையம் வந்த கடத்தல் ஆசாமிகள் இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.