மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்!

சென்னையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்!

சென்னையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில்  80 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் புதிய திட்டத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கென பிரத்யேக தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ள மாநகராட்சி, அதன் மூலம் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.