மனிதம் அழியவில்லை! காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

வலிப்பு நோயால் உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு மருத்துவ உதவி செய்து உயிரைக் காப்பாற்றியதோடு அவர் தவறவிட்ட 4 கிராம் மோதிரம் மற்றும் 5000 ரூபாய் பணம் ஆகியவற்றை உறவினர்கள் முன்னிலையில் முதியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மனிதம் அழியவில்லை! காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

திண்டிவனம் அடுத்த வென்னம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கன். முதியவரான இவர் திண்டிவனத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு நகை அடகு வைப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது நேரு வீதியில் உள்ள துணிக்கடை எதிரில், திடீரென கீழே விழுந்த முதியவர் வலிப்பு நோயால் உயிருக்கு போராடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வழியே சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் என்பவர் அந்த முதியவருக்கு முதலுதவி செய்து அந்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கொதிக்கும் கூழ் அண்டாவில் ஏறி உள்ளே விழுந்து இறந்த நபர்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி!!

பின்பு சிகிச்சைப் பெற்று மருத்துவமனையில் வெளியில் வந்த முதியவர் தனது உறவினர்களுடைன் காவல் உதவி ஆய்வாளருக்கு நேரில் சந்தித்து நன்றி கூறினார். இந்நிலையில், முதியவர் தவறவிட்ட 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் 5000 ரூபாய் பணம் ஆகியவற்றை உறவினர்கள் முன்னிலையில் உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் முதியவரிடம் ஒப்படைத்தார். இந்த செயலால் உதவி ஆய்வாளர் ஆனந்தராசனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | காதல் மனைவி இறந்ததால்...ரயில்முன் பாய்ந்து கணவர் தற்கொலை..!