நான் குணமடைந்தவுடன்..! பும்ரா நெகிழ்ச்சி பதிவு..!

நான் குணமடைந்தவுடன்..! பும்ரா நெகிழ்ச்சி பதிவு..!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

டி20 தொடரில் பும்ரா:

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காய பாதிப்பு காரணமாக பும்ரா டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டால், அரையிறுதிக்குள் கம்பேக் கொடுப்பார் என கணக்கிட்டது பிசிசிஐ.

மேலும் படிக்க:  விராட் கோலி படைத்த பெரும் சாதனை..! இதுவரை இந்திய வீரர்கள் செய்யாத சாதனை..!

கடினம்:

ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாவதற்கு குறைந்தது 4 - 5 வாரங்கள் ஆகுமாம். இதனை முடித்துவிட்டு நேரடியாக முக்கிய போட்டிகளில் விளையாடுயது சாதாரணம் அல்ல. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வேறு வழியின்றி இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பும்ரா பதிவு:

இந்நிலையில் இதுகுறித்து பும்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இந்த முறை டி20 உலகக்கோப்பையில் நான் இல்லாதது மன வேதனையாக உள்ளது. எனது நலனுக்காக வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி. நான் குணமடைந்தவுடன் இந்திய அணியை உற்சாகப்படுத்த நிச்சயம் அவர்களுடன் இருப்பேன் எனக்கூறியுள்ளார்.

மாற்று வீரர்கள்:

ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரரை தேடும் பணியில் பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. தற்போதைக்கு முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகிய மூவர் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஷமிக்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.