விராட் கோலி படைத்த பெரும் சாதனை..! இதுவரை இந்திய வீரர்கள் செய்யாத சாதனை..!

விராட் கோலி படைத்த பெரும் சாதனை..! இதுவரை இந்திய வீரர்கள் செய்யாத சாதனை..!

டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 :

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 237/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 221 /3 ரன்களை மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணி வெற்றி:

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பு இருந்தும், அணிக்காக அதனை அவர் செய்யவில்லை.

விராட் கோலி சாதனை: 

இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் விராட் கோலி பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார். அதாவது, அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டிலும் 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார். இதுவரை 354 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,030 ரன்களை குவித்தார்.

மேலும் படிக்க: டேட்டிங் செல்ல ரூ.300 வேண்டும்.. ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா.. அதிர்ந்த சமூக வலைதளம்..!

சர்வதேச சாதனைகள்:

சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்யும் 3வது வீரர் விராட் கோலி. இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிறிஸ் கெயில், கெயீரன் பொல்லார்ட் மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் செய்துள்ளனர்.

கிறிஸ் கெயில் - 463 போட்டிகளில் 14, 562 ரன்கள் ,
பொல்லார்ட் - 614 போட்டிகளில் 11,915 ரன்கள், 
சோயிப் மாலிக் - 481 போட்டிகளில் 11,902 ரன்கள், 
விராட் கோலி - 354 போட்டிகளில் 11,030 ரன்கள்.

ரோகித் சாதனை:

விராட் கோலியை போலவே ரோகித் சர்மாவும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது நேற்றைய போட்டியின் மூலம் 400 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். நேற்றைய போட்டியில் 37 பந்துகளில் 43 ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா.