இலங்கை தொடருக்கு இவரா கேப்டன்,. முதல் முறை வாய்ப்பு பெற்றுள்ள ஐபிஎல் ஹீரோக்கள்.! 

இலங்கை தொடருக்கு இவரா கேப்டன்,. முதல் முறை வாய்ப்பு பெற்றுள்ள ஐபிஎல் ஹீரோக்கள்.! 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக தவான்நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக  புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரித்வி ஷா,படிக்கல், கெய்க்வாட், சூர்ய குமார் யாதவ், மனீஷ்  பாண்டே, பாண்டியா, நித்திஷ் ராணா, இஷான் கிஷன்,சஞ்சு சாம்சன்,சஹால், ராகுல் சகார்,கௌதம், கருணால் பாண்டியா,குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, நவதீப் சைனி, சக்காரியா ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து தொடருக்காகவும், உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிக்காகவும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளதால் இரண்டாம் நிலை இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடர்பில் ஐபிஎஸ் ஹீரோக்களாக படிக்கள்,கெய்க்வாட்,நித்திஷ் ராணா,கௌதம்,சக்காரியா ஆகியோர் வாய்ப்பை பெற்றுள்ளனர்.மேலும் வலை பயிற்சி வீரர்களாக இஷான் போரேல்,சந்திப் வாரியர், அர்ஸ்தீப் சிங்,சாய் கிஷோர், சிமரஜித் சிங் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.