அடித்து ஆடிய தென்னாபிரிக்கா..! ஆல் அவுட் ஆன இந்திய அணி..!

அடித்து ஆடிய தென்னாபிரிக்கா..! ஆல் அவுட் ஆன இந்திய அணி..!

இந்தூரில் நடைபெற்ற கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியா vs தென்னாபிரிக்கா:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதன் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணியிடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்க அணி தொடரையும் இழந்தது. 

3வது டி20 :

இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி, இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, ரூசோவ்வின் அதிரடி சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரூசோவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார்.

மேலும் படிக்க: நான் குணமடைந்தவுடன்..! பும்ரா நெகிழ்ச்சி பதிவு..!

இமாலய இலக்கு:

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18 புள்ளி 3 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம், 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 

ஒரு நாள் போட்டி:

2-1 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. ஆட்டநாயகனாக ரூசோவ்வும், தொடர் நாயகனாக சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டனர். டி-20 தொடரை தொடர்ந்து, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது.