நாங்கள் தோற்றதுக்கு இது தான் காரணம்..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் மனம் திறந்த பேச்சு..!

டி20 உலககோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை வென்றது.
டி20 உலககோப்பை:
டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அரை இறுதி வரை சென்ற இந்தியா, இங்கிலாந்து அணியுடம் தோல்வியுற்று நாடு திரும்பியது. நேற்று ஆஸ்திரேலியா மெல்போரின் நடைப்பெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து வெற்றி:
1992 இல் நடந்ததைப் போல இறுதிப் போட்டியில் பாகிஸ்தானே வெற்றி பெறும் என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் இருந்த வேளையில், பாகிஸ்தானை தோற்கடித்து 1992இல் நடந்த தோல்விக்கு பழித் தீர்த்து கொண்டுள்ளது இங்கிலாந்து. இதன் மூலம் இரண்டாம் முறை உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதையும் படிக்க: 1992 இல் என்ன நடந்தது? பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கைக்கு காரணம் என்ன?
மனம் திறந்த பாபர்:
தோல்வி குறித்து மனம் திறந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர், இங்கிலாந்து அணிக்கு என் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன். அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியானவர்கள். எங்களுக்கு களத்தில் கடுமையான போட்டி கொடுத்தார்கள். இந்த தொடரில் நாங்கள் முதல் 2 போட்டியில் தோல்வியை தழுவினோம். ஆனால் அதன் பிறகு அனைத்து போட்டியிலும் வென்று இறுதிப் போட்டி வரை சென்றது மிகவும் சிறப்புமிக்கதாக நான் கருதுகிறேன்.
சிறந்த பந்துவீச்சாளர்கள்:
இறுதி போட்டியில், பேட்டிங்கில் நாங்கள் ஒரு 20 ரன்களை குறைத்து அடித்து விட்டோம் என கருதுகிறேன். இருப்பினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். உலகத்திலேயே சிறந்த பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியாக பாகிஸ்தான் இருக்கிறது.
இது தான் காரணம்:
ஷாகின் அப்ரிடி பந்துவீசும் போது பாதியில் வெளியேறினார். அது, எங்கள் அணிக்கு பெரிய நெருக்கடியை கொடுத்தது. ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையே அது தான். ஆனால் போட்டியின் போது வீரர்கள் காயம் அடைவது எல்லாம் இயல்பு தான். ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பாபர் அசாம் கூறியுள்ளார்.