களிமண் ஆடுகளத்தில் வீழ்ந்த களிமண் தரை நாயகனான ரபேல் நடால்.! இறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்.! 

களிமண் ஆடுகளத்தில் வீழ்ந்த களிமண் தரை நாயகனான ரபேல் நடால்.! இறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்.! 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் களிமண் தரை நாயகனான ரபேல் நடால் அரையிறுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரையிறுதி போட்டி ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்  மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலுடன்  மோதினர்.  இதில் 3/ 6,  6 / 3,  7 / 6, 6 / 2 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்றார். இதன்மூலம் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  

முன்னதாக நடைபெற்ற மற்றொரு  அரையிறுதி போட்டியில்  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6/ 3, 6 / 3, 4 / 6, 4/ 6, 6/ 3 என்ற செட்கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை போராடி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்..