முன்னாள் இந்திய வீரர்கள் இருவர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு..?!  

முன்னாள் இந்திய வீரர்கள் 2 பேரை இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இருக்குமாறு கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி உள்ளார். அவரது பயிற்சியில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இருப்பினும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது.அதனால், அவரது இடத்தில் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்து சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். மேலும்,தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் உள்ளார்.இந்தநிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக முன்னாள் கேப்டன் கும்ப்ளே மற்றும் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோரை கிரிக்கெட் வாரியம் அணுகலாம் என்ற தகவல்  கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் மத்தியில் வெளியாகி உள்ளது.