சேலத்தில் பாதான்ஸ் கிரிக்கெட் அகாடமி - இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திறந்து வைப்பு!

கடுமையான பயிற்சி மேற்கொண்டு திறமையை வளர்த்துக் கொண்டால் பெரிய இடத்தை அடையலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யூசப் பதான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாதான்ஸ் கிரிக்கெட் அகாடமி - இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திறந்து வைப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய சூரமங்கலத்தில் பாதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் 31வது கிரிக்கெட் மையத்தை கிரிக்கெட் வீரர் யூசப் பதான் திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் 6 வயது முதல் 14 வயது வரை ஆண்,பெண் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இளம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய யூசப் பதான் கடுமையான பயிற்சி மேற்கொண்டு திறமையை வளர்த்துக் கொண்டால் கிரிக்கெட்டில் பெரிய இடத்தை அடையலாம் என்றும்,

முறையான பயிற்சி கிடைக்காமல் ஏராளமான இளம் விளையாட்டு வீரர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.