உலகக்கோப்பை கால்பந்து..! அனல் பறந்த ஆடுகளம்..! காலிறுதி போட்டிக்கு முன்னேறிய அணி எது..! 

உலகக்கோப்பை கால்பந்து..! அனல் பறந்த ஆடுகளம்..! காலிறுதி போட்டிக்கு முன்னேறிய அணி எது..! 

விறுவிறுப்பாக நடைபெற்ற FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றன.

பிரான்ஸ் - போலந்து:

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர், தற்போது நாக்-அவுட் சுற்றை நெருங்கி வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், பிரான்ஸ் அணி போலந்து அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணி அக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஒலிவியர் கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அந்த அணியின் கைலியன் ஆட்டத்தின் 74 மற்றும் 91-வது நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இறுதியில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

கால்பந்து உலகக் கோப்பை: போலந்து அணியை வெளியேற்றி காலிறுதிக்குள் கால்பதித்த  பிரான்ஸ்!

இங்கிலாந்து - செனகல்:

நள்ளிரவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி செனகல் அணியை எதிர்கொண்டது. இதில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்தியது. இங்கிலாந்தின் ஜோர்டான் ஹென்டர்சன் ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதே போல், ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கேனும், 57-வது நிமிடத்தில் புகாயோ சகாவும் தலா ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி செய்தனர். 

England reaches World Cup quarterfinals, beats Senegal 3-0 | Mint

இதையும் படிக்க: இது யாருக்கெல்லாம் கடைசி உலகக்கோப்பை? சரித்திரம் படைக்கப் போவது யார்?

அடுத்த போட்டிகள்:

வருகிற 10-ம் தேதி நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்றிரவு இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் குரோஷிய அணி ஜப்பான் அணியையும், இரண்டாவது போட்டியில் பிரேசில் தென் கொரியாவையும் எதிர்கொள்கிறது.