விக்கெட் கீப்பராக களமிறங்கும் ரிஷப் பண்ட்..... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
விக்கெட் கீப்பராக களமிறங்கும் ரிஷப் பண்ட்..... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணி அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா , இஷாந்த் சர்மா, முகமது ஷமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டனாக அஜின்க்யா ரஹானேவும், விக்கெட் கீப்பராக களமிறங்கும் ரிஷப் பண்ட் ஆகியோருடன், சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.  இதேபோல், வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி ஆகியோரும் விளையாடுகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com