3-வது டெஸ்டிலும் வெற்றி : நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து இங்கிலாந்து அசத்தல்!

3-வது டெஸ்டிலும் வெற்றி : நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து இங்கிலாந்து அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லீட்சில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களும், இங்கிலாந்து அணி 360 ரன்களும் எடுத்தன. 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி 326 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதனையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.