விம்பிள்டன் டென்னிஸ் - முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி!!

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் ஜோகோவிச், முர்ரே, கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார். 

விம்பிள்டன் டென்னிஸ் - முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ், லண்டனில் நேற்று தொடங்கியது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தென்கொரியாவின் சூன்வோகிவோனை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வோன் க்வான் சூன் வூவைதோற்கடித்து ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், பிரிட்டனின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை 4-6, 6-3, 6-2, 6-4 என்ற செட்கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், இன்னொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் ஜான் லெனார்டு ஸ்ட்ரஃப்பை 4-6, 7-5, 4-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் போராடி தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.