தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? கடைசி போட்டி இன்று..!

இந்திய அணியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு..!

தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? கடைசி போட்டி இன்று..!

இந்தியா-தென்னாப்பிரிக்கா:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொரில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை கைப்பற்றியுள்ளது. 

நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு:

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி, இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேஎல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

அவர்களுக்கு பதில், ஸ்ரேயாஸ் ஐயர், ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடைசி போட்டியிலும் வெற்றி வாகை சூடி, தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ளது. 

மிகுந்த எதிர்ப்பார்ப்பு:

அதேநேரம் ஆறுதல் வெற்றிபெற தென்னாப்பிரிக்க அணியும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.