இது யாருக்கெல்லாம் கடைசி உலகக்கோப்பை? சரித்திரம் படைக்கப் போவது யார்?

கத்தாரில் நாளை தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடர் பல சர்வதேச வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
FIFA 2022:
உலக கோப்பை கால்பந்து பற்றிய பேச்சு அனல் பறந்து வருகிறது. திரும்பிய இடமெல்லாம் உலககோப்பை பற்றியும், கால் பந்து வீரர்கள் குறித்த விவாதங்களாக உள்ளதை காண முடிகிறது. நாளை தொடங்க இருக்கும் போட்டியில் 32 அணிகள் களம் காண்கின்றன. இதற்காக கத்தாருக்கு அனைத்து அணி வீரர்களும் சென்றுள்ளனர். பல நாடுகளில் இருந்து கால்பந்து ரசிகர்களும் கத்தாருக்கு சென்றுள்ளதால் களைகட்டியுள்ளது கத்தார் நாடு.
மெஸ்ஸி vs ரொனால்டோ:
கால்பந்தில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்துள்ளார்கள், இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் வருவாரகள் ஆனால், மெஸ்ஸியைப் போன்று ஒரு வீரர் இனி வரப் போவது இல்லை என்பது கால் பந்து ரசிகர்களின் கருத்து. அவருக்கு சற்றும் குறைவில்லாதவர் ரொனால்டோ. இதுவரை மெஸ்ஸி அல்லது ரொனால்டோ இருவரில் யார் சிறந்த வீரர்கள் என்ற பெயரில் 14 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது.
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்கு இது கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம் என்பதால், இருவரில் யார் தங்களின் கனவை எட்டி பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எதற்காக கடைசி போட்டி:
அர்ஜெண்டினாவின் நம்பிக்கை நட்சத்திரம் மெஸ்ஸிக்கு தற்போது 35 வயதாகிறது. 2026 ஆம் ஆண்டு உலககோப்பையின் போது அவருக்கு 39 வயதாகும். மனம் விளையாட தயாராக இருந்தாலும், உடல் ஒத்துழைக்குமா என்பது கேள்விக்குறியே.
அதேபோல், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவிற்கு தற்போது 37 வயதாகிறது. அடுத்த உலக் கோப்பயின் போது 41 வயதை எட்டி விடுவார் என்பதால் இதுவே இறுதி போட்டியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும் இந்த உலககோப்பையில் போர்ச்சுகல் வெற்றி பெற்றால் தான் ஒய்வு பெற்று விடுவதாக அறிவித்துள்ளார் ரொனால்டோ.
இதையும் படிக்க: கத்தாரில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்..! இதுக்கெல்லாமா தடை..!
லூயிஸ் சுவாரஸ்:
உருகுவே நாட்டிற்காக களமிறங்கிய கால்பந்து வீரர்களில் 134 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் லூயிஸ் சுவாரஸ். 34 வயதாகும் லூயிஸ் சுவாரஸ், தனது 4வது உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்க உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு உலகக்கோப்பையில் இத்தாலி நாட்டின் ஜியார்ஜியோவை கடித்ததற்காக வெளியேற்றப்பட்ட இவருக்கும் இது கடைசி உலகக்கோப்பையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி:
போலாந்து அனி ராபர்ட் லெவன்டோஸ்க்-ன் திறமை ரசிகர்களால் அந்த அளவிற்கு திரும்பி பார்க்கப்படவில்லை என்பதே உண்மை. ராபர்ட்க்கு தற்போது 34 வயதாவதால் இதுவே அவர்து இறுதி போட்டியாக இருக்கலாம். பேயர்ன் முனிச், டார்ட்மெண்ட் அணிகளுக்காக ஏராளமான சாதனைகளை படைத்திருந்தாலும், போலாந்து அணிக்காக 134 போட்டிகளில் பங்கேற்று 76 கோல்கள் அடித்ததையே அதிகமாக பேசுவார் ராபர்ட். கடந்த உலகக்கோப்பையில் குரூப் சுற்றோடு போலாந்து அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கரீம் பென்சிமா:
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் நாட்டின் மிக முக்கிய வீரர் மட்டுமல்லாமல், நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை வென்றவர் கரீம் பென்சிமா. கடந்த சில ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் தேசிய அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தாலும், உலகக்கோப்பைத் தொடருக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை தேசிய அணிக்காக 16 போட்டிகளில் 10 கோல்கள் அடித்து பென்சிமாவுக்கு தற்போது 34 முடிவடையவுள்ளது.
லூகா மோட்ரிச்:
குரோஷியா உலகளவில் புகழ்பெற காரணமாக அமைந்த லூகா மோட்ரிச்க்கு தற்போது 37 வயதாகிறது. 2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் குரோஷியா அணி தோல்வியை சந்தித்தாலும், 2018 ஆம் ஆண்டுக்கான கோல்டன் பால் விருதை வென்ற மோட்ரிச், ரியல் மேட்ரிட் அணிக்காக தொடர்ந்து 10வது சீசனாக பங்கேற்று வருகிறார். கடந்த உலகக்கோப்பை தொடரில் இழந்த கோப்பையை, இம்முறை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களமிறங்குகிறார் மோட்ரிச்.