GT VS KKR : SRH VS PBKS : இன்றைய லீக் ஆட்டத்தில் வெல்ல போவது யார்?

GT VS KKR : SRH VS PBKS : இன்றைய லீக் ஆட்டத்தில் வெல்ல போவது யார்?
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியை ராஜஸ்தான் ராயல்ஸ்சும், மும்பை அணியை, சென்னை சூப்பா் கிங்ஸ்சும் வென்று வெற்றி வாகை சூட்டியது. 

16-வது சீசன் ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி எதிா்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 199 ரன்கள் குவித்தது. அடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கோதாவில் இறங்கின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி எதிரணிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 158 ரன்கள் என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணி 18 புள்ளி 2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியும், மற்றொரு ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணியும் எதிா்கொள்கின்றன. இந்த போட்டிகளில் வெற்றிக்கனியை பறிக்க போவது யாா்? என ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com