சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய மூன்று போட்டியாளர்கள்... இவர்களில் யார் அடுத்த கேப்டன்?

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய மூன்று போட்டியாளர்கள்... இவர்களில் யார் அடுத்த கேப்டன்?

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்க இருப்பதால், இதற்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில்  மேற்கொள்ள உள்ளனர். நடப்பு சீசனில் தோனி தான் கேப்டனாக செயல்படுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆனால் எதிர்காலத்தை பற்றி யோசிக்கும் தோனி அடுத்த கேப்டனை அறிவித்து விடலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தான் ஐபிஎல் தக்கவைக்கும் பட்டியலில் கூட தமக்கு முன்னுரிமை வழங்காமல் ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, தமக்கு 12 கோடி ரூபாய் போதும் என்று தோனி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் ஜடேஜாவுக்கு தற்போது 33 வயது ஆகிவிட்டதால், தொடக்கத்திலேயே ஒரு இளம் வீரரை அணியில் கேப்டனாக நியமித்துவிடலாம் என ஸ்ரீனிவாசன் நினைக்கிறார். அதன்படி அவர் மனதில் தற்போது 2 வீரர்கள் உள்ளார்களாம். அந்த இரண்டு பேரிலும் முதலாவதாக இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட். இவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதை தவிர்த்து, அவரிடம் மிகுந்த கிரிக்கெட் அறிவும் இருப்பதால் ருத்துராஜை தோனி இருக்கும் போதே தயார்படுத்தலாம் என யோசித்து வருகிறாராம். 

அடுத்ததாக இருப்பவர், தற்போது ஆல்ரவுண்டராக விளங்கும் தீபக் சாஹர். இவர் ஒரு பேட்டியில் ’’இனி நீ தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு தான் விளையாடுவாய்’’ என்று ஸ்ரீனிவாசன் தம்மிடம் கூறியதாக தீபக் சாஹர் கூறியிருந்தார். அதனால் வருங்கால கேப்டனாகவும் இவர் ஜொலிப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

என்னதான் தோனிக்கு பிறகு ரெய்னா என்று சொன்னாலும், அந்த காலம் எல்லாம் மாறிபோய் தற்போது அந்த இடத்திற்கு ஜடேஜாவை தொடர்ந்து, ருத்துராஜ்,  தீபக் சாஹர் என அடுத்தடுத்து இளம் வீரர்கள்  வந்துவிட்டதாக கூறுகின்றனர். இதனால் அடுத்த ஐபிஎல் சீசனில் இவர்களில் யார்? அல்லது புதுசா வேற யாரையாவது  கேப்டனாக போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.