என்னப்பா last-ல இப்படி பண்ணிட்டீங்க.. கோலிக்காக ரெடியான ஸ்பெஷல் பிட்ச்.. 2 வருட காத்திருப்பை பூர்த்தி செய்யவா??

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில் விராட் கோலிக்கு பிடித்தது போன்ற பிட்ச் உருவாகியுள்ளது. இந்திய - இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டி நாளை சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
என்னப்பா last-ல இப்படி பண்ணிட்டீங்க.. கோலிக்காக ரெடியான ஸ்பெஷல் பிட்ச்.. 2 வருட காத்திருப்பை பூர்த்தி செய்யவா??
Published on
Updated on
1 min read

கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடிப்பார் என பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தான் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி சதமே அடிக்கவில்லை..

இந்நிலையில் பிசிசிஐயே அதற்கு வழிகாட்டியுள்ளது. அதாவது , கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் ஸ்பின்னர்களிடம் தான் விராட் கோலி தடுமாறி வருகிறார். எனவே சின்னசாமி மைதானத்தின் பிட்ச் முதல் மூன்று நாட்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு டாஸ் வெல்லும் அணி அதிகபட்சம் பேட்டிங் தான் தேர்வு செய்யும். ஏனெனில், இந்த பிட்ச் பேட்டிங் களமாக தான் உள்ளது. இது தவிர விராட் கோலியின் விருப்பமான மைதானங்களில் சின்னசாமி ஸ்டேடியமும் ஒன்று. 2008-ம் ஆண்டு வரை இந்த மைதானத்தில் தான் ஆர்சிபி-காக விளையாடி வருகிறார்.

விராட் கோலி கடைசியாக 2019ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக பகலிரவு டெஸ்டில் சதமடித்திருந்தார். எனவே நாளை தொடங்கும் இந்த பகலிரவு போட்டியில் அவர் தனது 2 வருட காத்திருப்புக்கு முடிவு கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com