RCB அணி கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோலி...

நடப்பு ஐபிஎல் தொடருக்குப் பிறகு விராட் கோலி, பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

RCB அணி கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோலி...

நடப்பு ஐபிஎல் தொடருக்குப் பிறகு விராட் கோலி, பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பைத் தொடருக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப்போவதாக அறிவித்த நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுகிறார்.  கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து பெங்களூரு அணிக்காக விளையாடப்போவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த நேரத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

33-வயதாகவும் விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால்  ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலி, ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.  விராட் கோலி தலைமையில் இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.