தோனியை விஞ்சும் சிறுமி: கிரிக்கெட் மட்டையை வேகமாக சுழற்றி அதிரடி

தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வெளியிட்ட, 6 வயது சிறுமி அபாரமாக கிரிக்கெட் பேட்டிங் செய்யும் வீடியோ இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.  

29 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் மெகெக் ஃபாத்திமாக என்ற அந்த சிறுமி, பேட்ஸ்மேனுக்கான உடையுடன் பந்தை பேட்டால் வெளுத்து வாங்குவது இடம்பெற்றுள்ளது. ட்விட்டரில் பதியப்பட்ட இந்த வீடியோவுக்கு நான் சிறுமி என்பதால் நீங்கள் எனக்கு சொல்லித் தர மாட்டீர்களா? என்று மெகெக் ஃபாத்திமா கேட்பதுபோல வாசகம் இடம்பெற்றது.

கேரளாவில் கோழிக்கோட்டைச் சேர்ந்த அந்த சிறுமி குறித்த பதிவை மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு ஆனந்த் மகிந்திரா டேக் செய்திருக்கிறார்.

https://www. youtube.com/watch?v=PEedFLyD1UQ