பறந்த சிக்ஸர்- பதறிய கிரிக்கெட்டர்... நடந்தது என்ன…?

இங்கிலாந்தில் நடைபெற்ற கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஆசிப் அலி அடித்த சிக்ஸர் அவரது கார் கண்ணாடியையே உடைத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பறந்த சிக்ஸர்- பதறிய கிரிக்கெட்டர்... நடந்தது என்ன…?

இங்கிலாந்தில் நடைபெற்ற கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஆசிப் அலி அடித்த சிக்ஸர் அவரது கார் கண்ணாடியையே உடைத்த வீடியோ காட்சிக்ள இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

லண்டனில் உள்ள இல்லிங்க்ஸ் ஒர்த் (Illingworth) என்ற பகுதியில் செயின்ட் மேரிஸ் கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு இலிங்க் ஒர்த் செயின்ட மேரிஸ் கிளப்பிற்கும் சொவர்பை செயின்ட் பீட்டர்ஸ் கிரிக்கெட் கிளப்பிற்கும் இடையே போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்ற வீரர் ஆசிப் அலி, பேட்டிங்கின்போது, அவரை நோக்கி வந்த பந்தை சுழற்றி அடித்தார்.

அப்போது வேகமாக பறந்து சென்ற அந்த பந்து, பவுண்டரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது சொந்த காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத  ஆசிப் அலி தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட, உடனிருந்தவர்கள் பயங்கரமாக சத்தம் எழுப்பி சிரித்தனர்.இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் சுவராஸ்மான நிகழ்வு என்று நகைப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.