அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டி: எம்மா ரடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டி: எம்மா ரடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில், 18 வயதேயான இளம் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 150ஆம் நிலையில் உள்ள இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவும், 73ஆவது இடத்தில் உள்ள கனடாவின் லேலா ஃபெர்னாண்டசும் மோதினர். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக இரண்டு இளம் வீராங்கனைகள் களம் கண்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ரடுகானு, தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

இந்த போட்டியில் கனடாவின் ஃபெர்னான்டஸ் செய்த தவறுகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட எம்மா ரடுகானு, 6-3 என இரண்டாவது செட்டையையும் கைப்பற்றி, நேர்செட் கணக்கில் அமெரிக்க ஓபன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவரது வெற்றியை தொடர்ந்து பிரிட்டன் ரசிகர்கள்  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com