U-20 சர்வதேச தடகளப் போட்டி: வெள்ளி வென்றார் சாய்லி சிங்…  

கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டியின், நீளம் தாண்டுதலில் இந்தியாவில் சாய்லி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

6 புள்ளி 59 மீட்டர் தூரத்தை தாண்டிய இவர் தங்கத்தை வெறும் 0 புள்ளி 01 மீட்டர் தூரத்தில் தவறவிட்டார். 6 புள்ளி 6 மீட்டர் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்கக் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியின் சாய்லி சிங் சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வெற்றி இந்தியாவின் இளம் தடகள வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.