டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி - லீக் ஆட்டத்தில் இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி - லீக் ஆட்டத்தில் இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில், ஏ பிரிவில் இடம் பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஃபெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய நியூசிலாந்து, முதல் கோல் அடித்தது. இதனையடுத்து, பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்திய இந்தியாவின் ரூபிந்தர் சிங், அதனை கோலாக மாற்றி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு சென்றார். முதல் பாதி ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் அபாரமான கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் 2-ம் பாதியில் நியூசிலாந்து வீரர்கள் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

எனினும், ஃபெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத் இரண்டாவது கோல் அடிக்க, ஆட்டம் முடியும் தருவாயில் நியூசிலாந்துக்கு மற்றொரு கோல் கிடைத்தது. எனினும், மேற்கொண்டு நியூசிலாந்து அணி கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்ட இந்திய அணி, 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.