ஐபிஎல் புள்ளிப்பட்டியலை தலைகீழாக மாற்ற போகும் இன்றைய மேட்ச்.. செம ட்விஸ்ட் வெயிட்டிங்!!

ஐபிஎல் புள்ளிப்பட்டியலை தலைகீழாக மாற்ற போகும் இன்றைய மேட்ச்.. செம ட்விஸ்ட் வெயிட்டிங்!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் செம ட்விஸ்ட் காத்துக்கொண்டிருக்கிறது. மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணிகள் தான் பீஸ்ட் மோடில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், குஜராத் அணியும் 4 போட்டிகளில் 3 போட்டிகள் வென்றுள்ளது.

வெற்றி தோல்வி சமநிலையில் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதலிடத்திலும், குஜராத் அணி 5வது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் மட்டும் குஜராத் வெற்றி பெற்றால் 5வது இடத்தில் இருந்து நேரடியாக 1வது இடத்திற்கு முன்னேறும். இதனால் புள்ளிப்பட்டியல் மொத்தமாக மாற வாய்ப்புள்ளது.

குஜராத் : மேத்யூவ் வேட், சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி ஃபெர்க்யூசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே..

ராஜஸ்தான் : ஜாஸ் பட்லர், ராசி வாண்டர் டுசன், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், குல்தீப் சென், அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல்..