இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் இவர்தான்.. ரிக்கி பாண்டிங்கே சொல்லிட்டாரா? அப்போ சரியாதான் இருக்கும்..!

இந்திய அணியின் டாப் 4-ல் சூர்யகுமார் இருக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்..!

இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் இவர்தான்.. ரிக்கி பாண்டிங்கே சொல்லிட்டாரா? அப்போ சரியாதான் இருக்கும்..!

ரிக்கி பாண்டிங்: இந்திய கிரிக்கெட் அணியையும் தாண்டி, உலகளவில் பிற நாடுகளை சேர்ந்த வீரர்களையும் கொண்டாட இந்திய ரசிகர்கள் தவறியதில்லை. அப்படிப்பட்ட வீரர் முன்னாள் ஆஸ்திரேலிய நடத்திர வீரர் மற்றும் இன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளராகவும் ரிக்கி பாண்டிங் இருந்து வருகிறார். சமீப காலமாகவே கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் பிரச்னைகள் குறித்தும் இந்திய அணிகளில் ஏற்படும் நிறை, குறைகள் குறித்தும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக கூறி வருகிறார். 

சூர்யகுமார் அடுத்த ஏபி டிவில்லியர்ஸ்: அந்த வரிசையில் இந்திய வீரர் சூர்ய குமாரை இவர் புகழ்ந்துள்ளது பேசு பொருளாக மாறி வருகிறது. சூர்யகுமார் 360 டிகிரி ஆடும் வீரர் தான், கொஞ்சம் ஏபி டிவில்லியர்ஸ் சாயல் அவரது பேட்டிங் இருப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். “மிக மிக ஆர்வமூட்டும் ஒரு சுவாரஸிய வீரர் சூரியகுமார் யாதவ். இவரைப்போன்ற ஒருவரை பிளேயிங் லெவனில் எந்த ஒரு கேப்டனும் உடனடியாக தேர்வு செய்து விடுவார். டி20 உலகக்கோப்பையில் ஒருவர் இடம் உறுதி என்றால் இந்திய அணியில் அது ரோஹித் சர்மாவுக்குப் பிறகு சூர்யகுமார் தான் என ஆணித்தரமாக கூறியுள்ளார். 

டாப் 4-ல் இருக்க வேண்டும்: இந்திய அணியின் டாப் 4-ல் இவர் இருக்க வேண்டும். சூர்யாவை ஓப்பனிங்கில் இறக்கக் கூடாது, புதிய பந்திலிருந்து இவரை கொஞ்சம் பாதுகாத்து ஒளித்து வைக்க வேண்டும், மிடில் ஓவர்களில் இறங்கினால் நல்லது, மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை இறங்காமல் ஏற்றி விட்டால் போதும் கடைசி வரை சூர்யா நின்றால் என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியும் என அவரை புகழ்ந்து பேசியுள்ளார் ரிக்கி பாண்டிங்.