சாம்பியன் பட்டம் பெறப்போவது யார்..?  ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா?

இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சாம்பியன் பட்டம் பெறப்போவது யார்..?  ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா?

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவல், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2015-ம் ஆண்டில் ஒருநாள் போட்டி உலககோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து அணி தோற்று இருந்தது. இதனால் இறுதிப்போட்டியில் பதிலடி கொடுத்து, கோப்பையை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.