கோலாகலமாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழா...

கடந்த 17 நாட்களாக உலக மக்களை விளையாட்டின் மூலம் ஒன்றிணைத்த டோக்கியோ ஒலிம்பிக்கின் நிறைவு விழா, கோலாகலமாக நடைபெற்றது

கோலாகலமாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழா...

32ஆவது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. 205 நாடுகள் பங்கேற்ற  நிலையில், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில், 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 7 பதக்கங்களை வென்று, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்தது.

இந்த நிலையில் இறுதிநாளான இன்று  நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒலிம்பிக் மரபுப்படி நடைபெற்ற இந்த நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்ற இந்திய அணிக்கு, மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார். 

நிறைவு விழா முடிவில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.  அத்துடன் அந்த நாட்டின் கொடியும் நிறைவுவிழாவில்  ஏற்றப்பட்டது.