பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை... எதற்காக  அப்படி செய்தார் தெரியுமா..?

போலந்து வீராங்கனை ஒருவர், ஒலிம்பிக்கில் தனக்கு கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலத்திற்கு விட்டு, 8 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். 

பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை... எதற்காக  அப்படி செய்தார் தெரியுமா..?

போலந்து நாட்டவரான மரியா, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார். இந்த பதக்கத்தை கொண்டு தனது வீட்டினை அலங்கரிக்க விரும்பாத அவர், அதனை பயன்படுத்தி  பிறருக்கு உதவி செய்வது என முடிவு செய்தார். 

இந்நிலையில், அரியவகை இதய நோயால் பாதிக்கப்பட்ட, 8 மாதக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக 2 புள்ளி 86 கோடி ரூபாயை பெற போராடுவதை கேள்விப்பட்டுள்ளார். குழந்தைக்கு உதவ முன்வந்த மரியா, தனது வெள்ளிப் பதக்கத்தை ஏலத்திற்கு விட்டுள்ளார்.

இதனை 1 புள்ளி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்துக்கொண்ட Żabka சூப்பர்மார்க்கெட் நிறுவனம், மரியாவின் செயலை பாராட்டி அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்கியுள்ளது.