டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது: பதக்க பட்டியலில் இந்தியாவின் இடம் என்னா?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி, இன்றுடன் நிறைவடைய உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது: பதக்க பட்டியலில் இந்தியாவின் இடம் என்னா?
32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 205 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, இன்றுடன் நிறைவடை கிறது. இந்திய அணி பங்கேற்ற போட்டிகள், நேற்றுடன் முடிந்து விட்டன. கடைசி நாளான இன்று போட்டிகள் முடிந்ததும் நிறைவு விழா நடைபெற உள்ளது.
அதில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறும். நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். மேலும், அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஃபிரான்ஸ் நாட்டிடம், ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி பதக்க பட்டியலில் அமெரிக்கா 39 தங்கம், 40 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 112 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 66-வது இடத்தில் இருந்து 47-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.