அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க வீரர்கள்.. பாம்பால் தடைபட்ட ஆட்டம்.. போராடி வென்ற இந்திய அணி..!

இந்தியாவின் சொதப்பல் பவுலிங்கால் தென்னாப்பிரிக்க வீரர்கள் விளாசல்..!

அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க வீரர்கள்.. பாம்பால் தடைபட்ட ஆட்டம்.. போராடி வென்ற இந்திய அணி..!

தென்னாப்பிரிக்கா - இந்தியா:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 
இந்த தொடரின் முதல் ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அனி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
பெற்றது. 

இரண்டாம் ஆட்டம்:

இதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தார். 

ரன்களை குவித்த ரோஹித் - கே.எல்.ராகுல்:

இந்திய அணியில் களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் சேர்ந்து முதல் ஆறு 
ஓவர்களில் 57 ரன்களை குவித்தனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டம் திடீரென பாதியில் நின்றது. 

பாம்பால் தடைபட்ட ஆட்டம்:

தொலைக்காட்சிகளில் பார்த்தால், மைதானத்தில் ஒரு பாம்பு ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் 
மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மைதான ஊழியர்கள் பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். 

20 ஓவரில் 237 ரன்கள்:

இதனையடுத்து மீண்டும் போட்டி தொடர்ந்தது. ராகுல், ரோஹித்துக்கு பிறகு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் சூர்ய குமார் யாதவ் இருவரும் 
தென்னாப்பிரிக்காவின் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க 20 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது.

 

அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க வீரர்கள்:

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 47 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை 
இழந்து தடுமாறியது. அடுத்தாக ஜோடி சேர்ந்த குயிண்டன் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி, இந்தியாவின் பந்து வீச்சை சரமாரியாக 
அடிக்க ஆரம்பித்தனர். 

பவுலிங்கில் சொதப்பிய இந்தியா:

நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக தீபக் சாஹரை தவிர்த்து மற்ற பவுலர்கள் 
தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்காகவே பந்துகளை வீசியது போன்று தெரிந்தது. 

இந்தியா போராடி வெற்றி:

விறு விறு என ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா போராடி 16 ரன்கள் 
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டியில் வெற்றி பெற்று, முதன் முறையாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது இந்தியா.