"உலகக்கோப்பை ஹாக்கி".. இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

பேட்மிண்டன் தரவாிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-10 இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்திலும், இந்திய வீரர் பிரனாய் 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி முதலிடத்தில் தொடா்கிறார். சமீபத்தில் நடந்த சுவிஸ் ஓபன் போட்டியில் 2-வது சுற்றில் தோல்வி கண்ட இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2 இடம் சரிந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா வருகிற 31 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அதன்படி அகமதாபாத் மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்திலேயே குஜராத் டைட்டன்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிக்க : நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்த ராகுல்காந்தி விவகாரம்... இருஅவைகளும் ஒத்திவைப்பு!
இந்நிலையில் 10 அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 70 லீக் ஆட்டங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளதையடுத்து, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விலை ஆயிரத்து 500 ரூபாய் முதல் இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை, ஆன்லைன் மற்றும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று காலை 9:30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், டிக்கெட் வாங்குவதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். சென்னை சேப்பாக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறுவதால், தோனி, ஜடேஜா உள்ளிட்ட சென்னை வீரர்களை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.
ஒரு புதுயுக கால் பந்தாட்ட அகாடமியான FC Madras (எஃப்சி மெட்ராஸ்), சென்னை அருகே மகாபலிபுரத்தில் (Mahabalipuram) உலகத்தரத்திலான கால் பந்தாட்ட அகாடமி ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறது.
அகில இந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு (AIFF) மற்றும் ஆசிய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றால் குறித்துரைக்கப்பட்டவாறு FIFA தரநிலைகளுக்கு இணக்கமானதாக “ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ்” என்ற இவ்வளாகம், உருவாக்கப்பட்டிருக்கிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளாகத்தில் இரவு நேரத்திலும் ஜொலிக்கும் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் விளையாடுவதற்கான கால்பந்தாட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம், உடல் வலுவை மேம்படுத்தி உடற்தகுதியைப் பேணுவதற்கான மையம், மருத்துவ சிகிச்சை மற்றும் காயங்களிலிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க ஃபுட்ஸ்சால் மைதானம், 6 லேன்கள் கொண்ட நீச்சல் குளம், நவீன சமையலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, NIOS (திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறுவனம்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகியவை இவ்வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு சிறப்பு வசதிகளுள் சிலவாகும்.
திறன் உருவாக்கல் என்ற குறிக்கோளின் மீது நீண்டகால பொறுப்புறுதியை இந்த அகாடமி கொண்டிருக்கிறது. கால்பந்தாட்டம், கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கல்வி முறையியலுடன் உலகத் தரத்திலான கால் பந்தாட்ட உட்கட்டமைப்பு வசதியையும், தனித்துவமான கலவையை வழங்குவது இதன் நோக்கமாகும். மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான இந்த உள்ளுறை வளாகத்தில் 130 இளம் வீரர்கள் வரை படிக்கலாம். அவர்களது கால் பந்தாட்ட பயிற்சி, தங்கியிருப்பு மற்றும் கற்றல் தேவைகள் அனைத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும்.
திறனும், ஆர்வமும் மிக்க கால் பந்தாட்ட வீரர்களை தேடி கண்டறிவதற்கு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டத்தின் மூலம் திறமையான இளம் கால் பந்தாட்ட வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) – ஐ எஃப்சி மெட்ராஸ் வழங்குகிறது. சர்வதேச அளவில் இந்திய நாட்டின் பிரதிநிதிகளாக சிறப்பாக விளையாடி தேசத்திற்கு பெருமை சேர்க்கின்ற கால் பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதும் மற்றும் இந்தியாவில் கால் பந்தாட்டத்திற்கு மிக சிறப்பான பயிற்சி வழங்கும் மையமாகவும் திகழ்வதே இந்த அகாடமியின் நோக்கமாகும்.
இதையும் படிக்க: தேமுதிகவின் விஸ்வரூப வெற்றியை....!!
விஜய் படத்தின் பாடலுக்கு தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீசன் 16 ஐபிஎல் போட்டி வரும் 31 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில், அணிகள் ஒவ்வொன்றும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : தோ்வு எழுதாமல் தவறியவா்களுக்கு மறுதோ்வு நடத்தப்படும் - திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி!
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய்யின் பீஸ்ட பட பாடலுக்கு டோனி உள்ளிட்ட 4 வீரர்கள் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வரும் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு, டோனி கித்தார் வாசிப்பது போன்றும், அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்றும் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்றன.
இந்திய அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதையும் படிக்க : பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்...மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!
இதற்கிடையே, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தோல்வி, புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.