நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்திய அணி

ஸ்ரேயஸ் ஐயர், சாஹா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது...

நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து, கிரிக்கெட் அணிகள் கான்பூரில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் இந்தியா 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்திருந்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 51 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

கில், பூஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், ஜடேஜா என ஐந்து பேரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஷ்ரேயஸ் ஐயர், பொறுப்புடன் விளையாடி 65 ரன்களை சேர்த்தார். குறிப்பாக அஷ்வின் மற்றும் சாஹாவுடன் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷ்ரேயஸ். இது இந்திய அணியை வலுவான நிலைக்கு முன்னிலை பெற உதவியது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரகானே ஆட்டத்தை டிக்ளேர் செய்தார்.

4-வது நாள் ஆட்டத்தில் ஒரு சில ஓவர்கள் இருந்த நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே அதிர்ச்சியை தந்தனர். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய வில் யாங்கை அஸ்வின் தமது சுழலில் மடக்கினார். இதையடுத்து 4வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இன்னும் 280 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், நாளை நியூசிலாந்து அணி தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழலில் உள்ளனர்.