நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு.. ஐதராபாத் அணிக்கு திடீர் பின்னடைவு.. யாரால் தெரியுமா? ஏன்?

ஐபிஎல் தொடரில் நல்ல கம்பேக் கொடுத்து வரும் ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு.. ஐதராபாத் அணிக்கு திடீர் பின்னடைவு.. யாரால் தெரியுமா? ஏன்?

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்து சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. அதில், பல புது அணிகள் சிறப்பாக விளையாடி வருகிறது.

அதில், ஐதராபாத் அணி நல்ல கம்பேக் கொடுத்து வரும் நிலையில், தற்போது ஒரு சோக செய்தி வந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஐபிஎல் தொடரின் தொடக்கம் மோசமாக தான் இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பி வந்த நிலையில், வழக்கம் போல் விமர்சனங்கள் கிளம்பின.

அதன் பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை.. பலமான சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதே போல், ஐபிஎல் தொடரில் யாராலும் வீழ்த்த முடியாத அணியாக இருந்த குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், அணி வெற்றி பாதைக்கு திரும்புகிறது என ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு நீடிக்கவில்லை.. ஐதராபாத் அணியின் முன்னணி வீரரான வாஷிங்டன் சுந்தர் குறைந்தது இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால், அவர் ஒரு சில நாட்களுக்கு பவுலிங் வீசுவது கடினமாகிவிட்டது. வாஷிங்டன் சுந்தரின் இழப்பு ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவுதான்.

ஏனென்றால், பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்களை பறக்கவிட்டு அசத்தினார். அதேபோல் பந்துவீச்சிலும் ஒவ்வொரு போட்டியிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்படிப்பட்ட ஒருவருக்கு மாற்று வீரரை களமிறக்க வேண்டிய சிக்கலில் வில்லியம்சனும் இருக்கிறார்.