"தோனி தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்" முதலமைச்சர் நம்பிக்கை...!!!

"தோனி தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்" முதலமைச்சர் நம்பிக்கை...!!!

தமிழ்நாட்டின் வளர்ப்பு மகன் தோனி, தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என நம்புகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் கலந்துக்கொண்டு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து, முதலமைச்சர் கோப்பைக்கான இலட்சினை மற்றும் வீரன் சின்னம், முதலமைச்சர் கோப்பைக்கான டி-ஷர்ட், முதலமைச்சர் கோப்பை கருப்பொருள் பாடல் உள்ளிட்டவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். Image

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தொழில் நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் விளம்பர தூதராக தோனி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றிய தலைமை செயலாளர் இறையன்பு, விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு கிடையாது அது ஒரு கொண்டாட்டம். விளையாட்டு ஒரு உத்தேவேகத்தை அளிக்கும் அதோடு ஊக்கப்படுத்தும் எனவும், நான்கே மாதங்களில் சர்வதேச போட்டியான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தினோம். சர்வதேச போட்டிகளை நடத்த எல்லா தகுதியும் இங்கு உள்ளது என்று கூறினார். Image

தொடர்ந்து உரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்பதற்காக இன்று தமிழ்நாடு சாம்பியன்ஸ் தொடங்கப்படுகிறது. இந்த துறை சார்பாக பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை கண்டு வருகிறேன். விளையாட்டுக்கு என்று நமது மாநிலத்தில் சிறப்பான கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான நிதி தேவைப்படுவதாக கூறினார். Image

தொடர்ந்து பேசிய அவர், வீரர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் இந்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் வளர்ச்சி, கல்வி, மருத்துவம் போன்ற எல்லாவற்றிலும் இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டியாக  தமிழ்நாடு விளங்குவது போல விளையாட்டு துறையிலும் வழிகாட்டியாக வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு 76 பயிற்சியாளர்களை உருவாக்கி இருக்கிறோம் என கூறினார். 

இறுதியாக சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், "தமிழ்நாட்டில் உள்ள எல்லோரையும் போல நானும் தோனியின் மிகப் பெரிய ரசிகன். தோனியின் விளையாட்டை பார்ப்பதற்காக இரண்டு முறை சேப்பாக்கம் விளையாட்டு நான் சென்றேன். தமிழ்நாட்டின் வளர்ப்பு மகன் தோனி, தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என நம்புகிறேன்" எனக் கூறினார். மேலும் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, விளையாட்டுத் துறையில் இன்னும் பல தோனிகளை நம் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்க விரும்புகிறோம் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:"பாஜக ஊழல் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக சிதைந்துள்ளன" பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...!!