விராட் கோலி விலகுவதற்கு பிசிசிஐ காரணம் இல்லை..கங்குலி விளக்கம்

விராட் கோலி விலகுவதற்கு பிசிசிஐ காரணம் இல்லை..கங்குலி விளக்கம்

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதற்கு, பிசிசிஐ காரணம் இல்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதில் எந்தவிதமான அதிர்ச்சியும், வியப்பும் இல்லை எனக் கூறியுள்ள கங்குலி, இங்கிலாந்து தொடர் முடிந்த போதே தனது முடிவு குறித்து கோலி பேசி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதில், பிசிசிஐ சார்பில் எந்தவிதமான அழுத்தமோ அல்லது நெருக்கடியோ கொடுக்கவில்லை என்றும், பிசிசிஐ யாரையும் எந்த நெருக்கடிக்கும் ஆளாக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 3 வித கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்படும் கோலிக்கு அதிகளவில் மன அழுத்தம், உடல்ரீதியான பிரச்சினை இருக்கும் எனக் கூறினார்.