இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி... 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி... 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதன் பின்னர் ஸ்டீவன் ஸ்மித் 28 ரன்களும், ஸ்டாய்னிஸ் 16 ரன்களும் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி வெற்றியை எட்டியது. 3 ஓவர்களில் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.