கோலாகலமாக துவங்கிய 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள்.. பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!

இந்தியாவை ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டு தான் - பிரதமர் மோடி..!

கோலாகலமாக துவங்கிய 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள்.. பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!

தேசிய விளையாட்டு போட்டிகள்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் தொடக்கவிழா நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்தியா ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டுகள்:

விழாவை துவக்கிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டு தான் என்று தெரிவித்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு, நம் விளையாட்டு வீரர்களில் 100-க்கும் குறைவான தடகள வீரர்களே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்ததாகவும், தற்போது, நமது வீரர்ரகள் 300 க்கும் மேற்பட்டோர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவித்தார். 

கண்கவர் கலை நிகழ்ச்சிகள்:

முன்னதாக தேசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் காண்போரை பிரமிக்க வைத்தது.