டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் இறுதியாட்டம்.. அதிவும் ரபேலுடன் இணைந்து..!

1998-ல் ஆரம்பித்த பதக்க வேட்டை.. இறுதியாட்டத்திலும் பதக்கத்தை அள்ளுமா?

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் இறுதியாட்டம்.. அதிவும் ரபேலுடன் இணைந்து..!

வாழ்க்கைக்கு உதாரணம்:

குழந்தைகள் பொதுவாக சிறு வயதில் அனைத்து விதமான விளையாட்டுகளையும் அதன் விதிமுறைகளை களைந்து ஒரு ஆர்வத்தில் விளையாடுவர். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தான் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அந்த விளையாட்டை பற்றிக் கொள்பவர்கள் தான் பின்னாளில் அந்த விளையாட்டில் ஜொலிக்க முடியும். இதற்கு சிறந்த உதாரணம் ரோஜர் பெடரர்

உலகின் சிறந்த ஜூனியர் டென்னிஸ் ஆட்டக்காரர்:

ஸ்விட்ஸர்லாண்டில் பிறந்த ஒரு சிறுவன் தனது 12-வது வயதில் டென்னிஸ் தான் தனது வாழ்க்கை என முடிவெடுத்து, தன்னுடைய 14-வது வயதில் வாரத்திற்கு 6 மணி நேரம் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினார். 16 வயதில் டென்னிஸ்காக தனது படிப்பை தியாகம் செய்த சிறுவன், 1998-ம் ஆண்டு நடைபெற்ற ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றான். அதே ஆண்டு ஆரஞ்சு பௌல் பட்டத்தையும் பெற்று, உலகின் சிறந்த ஜூனியர் டென்னிஸ் ஆட்டக்காரராக அங்கீகரிக்கப்பட்டான். 

தரவரிசையில் முதல் இடம்:

அது முதல் ஜூனியர் பிரிவில் இருந்து ஆடவர் பிரிவுக்கு முன்னேறி விளையாடத் தொடங்கினார் ரோஜர் பெடரர். விளையாட தொடங்கிய முதல் ஆண்டிலேயே தரவரிசையில் 100 இடத்திற்கு முன்னேறினார். அதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும், அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் ரோஜர். 

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவர்:

அன்று முதல் தனது தரத்தை என்னென்றும் அவர் குறைத்துக் கொண்டதே இல்லை. முதல் இரண்டு இடத்தை எப்போது தக்க வைத்துக் கொண்டே இருந்தார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான ரோஜர் தனது ஓய்வினை சமீபத்தில் அறிவித்தார். அதன் படி லண்டனின் இன்று தொடங்கும் லேவர் கோப்பை தொடருடன் அவர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுகிறார். 

இன்று கடைசி ஆட்டம்:

இந்திய நேரப்படி மாலை 5 மணியளவில் தொடங்கவுள்ள இப்போட்டியில், உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடவுள்ளார். இறுதி என்பதாலும், இரண்டு ஜாம்பவான்கள் ஒரே களத்தில் இறங்குவதாலும் இன்றைய போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.