திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஐபிஎல்-ல் மீண்டும் கால் பதிக்கும் "மலிங்கா".. பயங்கர குஷியில் ரசிகர்கள்!!

அனல் பறக்கும் வேகத்தில் பந்துகள் வீசி முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லசித் மலிங்கா மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் நுழையும் நிலையில், ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஐபிஎல்-ல் மீண்டும் கால் பதிக்கும் "மலிங்கா".. பயங்கர குஷியில் ரசிகர்கள்!!

ஐபிஎல் 15-வது தொடர் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்களுக்கான ஜெர்ஸி, அணி மாற்றங்கள் குறித்து அப்டேட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா லேட் என்ட்ரி ஆக ஐபிஎல் தொடருக்குள் நுழைந்துள்ளார். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயதாகும் மலிங்கா ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீராக இன்னமும் திகழ்ந்து வருகிறார். 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் நவ்தீப் சைனி, பிரஷித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய் ஆகியோர். அவர்கள் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வருகின்றனர். இதனால் லசித் மலிங்கா போன்ற ஒரு அனுபவம் உள்ள வேகப்பந்து வீச்சாளர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது அது இன்னும்  பலமாக அமையும். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் மலிங்காவிற்கு நீண்ட அனுபவம் உள்ளதால், ராஜஸ்தான் அணிக்கு ஒரு சிறந்த ஆலோசகராகவும் திகழ்வார் என எதிர்பாக்கப்படுகிறது.