தெ.ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 - இந்திய அணியில் ராகுல் திரிபாதி இடம்பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி..?

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திரிபாதி இடம் பெறாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

தெ.ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20  - இந்திய அணியில் ராகுல் திரிபாதி இடம்பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி..?

நடப்பு ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ராகுல் திரிபாதி, 14 போட்டிகளில்  413 ரன்களை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, திரிபாதியை உலகக்கோப்பை டி-20 தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராகுல் திரிபாதி இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள், சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், முன்னாள் வீரர்கள் சேவாக், ஹர்பஜன்சிங் ஆகியோரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஹர்பஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், " இந்திய அணியில் ராகுல் திரிபாதியின் பெயரை காணாதது ஏமாற்றம் அளிக்கிறது. அவர் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர் என பதிவிட்டுள்ளார்.