டி20 உலககோப்பை தொடர்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி

டி20 உலக கோப்பை போட்டியில் நமிபிவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

டி20 உலககோப்பை தொடர்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபியில்  இன்று நடைபெற்று வரும் 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நமிபியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.

சிறப்பாக விளையாடிய பாபர் ஆசம் 49 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில்  பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்கள் குவித்தது.இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

முன்னதாக, அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச அணிகள் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில்  பேட்டிங் செய்த வங்கதேச அணி,  வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்  சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 84 ரன்களை எடுத்தது. 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 13.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை எட்டியது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் மூன்றாவது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது.இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.