தென்னாப்ரிக்காவில் களமிறங்கும் சூப்பர் கிங்ஸ், மும்பை கேப்டன்..! அப்போ வீரர்கள்?

சூப்பர் கிங்ஸ், மும்பை கேப்டன் என பல பெயர்களில் களமிறங்கும் ஐபிஎல் அணிகள்..!

தென்னாப்ரிக்காவில் களமிறங்கும் சூப்பர் கிங்ஸ், மும்பை கேப்டன்..! அப்போ வீரர்கள்?

தென் ஆப்ரிக்காவில் ஐபிஎல் அணிகள்: தென் ஆப்பிரிக்கவில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் அணிகள் விளையாடவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இதில், ஐபிஎல்லில் விளையாடிய அணிகள் களம் காண உள்ளன.

சூப்பர் கிங்ஸ்: அதன்படி சென்னை அணி நிர்வாகம் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் எனும் பெயரிலும், மும்பை அணி நிர்வாகம் மும்பை கேப்டன் எனும் பெயரிலும், ராஜஸ்தான் அணி பார்ல் ராயல்ஸ் எனும் பெயரிலும், டெல்லி அணி நிர்வாகம் பிரிட்டோரியா கேபிடல்ஸ் எனும் பெயரிலும் அணிகளை களமிறக்க உள்ளன. இந்நிலையில், ஹைதராபாத் அணி நிர்வாகமும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர் கேப் எனும் பெயரிலும் தங்கள் அணியை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.