திடீர் ட்விஸ்ட்.. மும்பை இல்லை.. ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதப்போகும் அணி? என்ன காரணம்?

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே உடன் மோதப்போகும் முதல் அணி யார் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் ட்விஸ்ட்.. மும்பை இல்லை.. ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதப்போகும் அணி? என்ன காரணம்?

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி - மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை 10 அணிகள் விளையாட இருப்பதால், அதற்கான விதிமுறைகள், அட்டவணைகள் என அனைத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 அணிகள் 2 குரூப் ஆக பிரிந்து மொத்தம் 70 போட்டிகள் ஆட உள்ளனர். இதற்கான முழு விவரம் அடங்கிய அட்டவணை இந்த வாரம் வெளியாக உள்ளது.

வழக்கம் போல், போன ஐபிஎல் தொடரை வென்ற அணி தான் இந்த முறை முதல் ஆட்டத்தை எதிர்கொள்ளும்.. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தான் முதல் ஆட்டத்தை விளையாடுகிறது.

அதன்படி, சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை அணி தான் விளையாடும் என அனைவரும் எதிர்பார்த்துக்காத்திருந்தனர். ஆனால் , இந்த முறை கடைசி நேரத்தில் ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது.

அதன்படி,  சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை அணி ஆடவில்லை என்றும், சிஎஸ்கேவுக்கு  எதிராக முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி தான் மோத உள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த ஆண்டு இறுதி போட்டியில் இந்த இரண்டு அணிகள் தான் மோதி கொண்டன. அந்த வகையில் விட்டதில் இருந்தே ஆரம்பிக்கும் எண்ணத்தில் இந்த ஏற்பாடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் மும்பை அணிதான் விளையாட வேண்டியிருந்தது. ஆனால் முதல் போட்டி வான்கடேவில் நடக்கிறது. மும்பைக்கு ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்கக்கூடாது என்பதால்,  வேறு வழியின்றி கொல்கத்தா அணியை சிஎஸ்கேவுடன் மோதவைத்துள்ளனர்.