திடீர் ட்விஸ்ட்.. கேப்டன் பதவியை ஏற்று கொள்ளுங்கள்.. ஆர்சிபி கெஞ்சி வரும் அந்த அசத்தல் வீரர் யார்?

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், கேப்டன் பதவியை ஏற்று கொள்ளுங்கள் என ஆர்சிபி நிர்வாகம் ஒரு வீரரிடம் கெஞ்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் ட்விஸ்ட்.. கேப்டன் பதவியை ஏற்று கொள்ளுங்கள்.. ஆர்சிபி கெஞ்சி வரும் அந்த அசத்தல் வீரர் யார்?

ஐபிஎல் 15-வது தொடர் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்களுக்கான ஜெர்ஸி, அணி மாற்றங்கள் குறித்து அப்டேட்களை வழங்கி வருகின்றனர். ஆனால் ஆர்சிபி அணி மட்டும், இன்னும் அணியின் கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை..

கடந்த 2013 ஆம் ஆர்சிபி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் விராட் கோலி. அன்றில் இருந்து இன்றுவரை ஆர்சிபி அணியை வழிநடத்தி வருகிறார். ஆனால், இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றுக்கொடுக்கவில்லை, ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை என பல விமர்சனங்கள் கிளம்பின. இதனால், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதாவது விராட் கோலிக்கு அடுத்தபடியாக டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் கேப்டன் பதவிக்கான லிஸ்டில் இருந்தனர். இதில் இருந்து அனுபமிக்க ஒருவரை கேப்டனாக எடுக்க தான் நீண்ட ஆலசோனை நடந்து வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தான் ஒரு மிக பெரிய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.. அது என்னவென்றால், கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி விலகுவதாக கொடுத்த கடிதத்தை இன்னும் ஆர்சிபி நிர்வாகம் ஏற்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விராட் கோலியிடம் கேப்டன் பதவியை தொடரும் படி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கேப்டனை அறிவிக்கப்போவதாக உருவ கட் அவுட் போன்ற சில படங்களை ஆர்சிபி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த உருவ கட் அவுட் படம் விராட் கோலி தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கேப்டன் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு ஒப்புக்கொண்டாரா என்று கூட சந்தேகம் எழுந்து வருகிறது.