350 வீரர்கள் பங்கேற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி...

தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

350 வீரர்கள் பங்கேற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி...

தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது, மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சீனியர் ஜீனியர், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன.

மேலும் படிக்க | ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!!!

17 வயதுக்கு உட்பட்டோர், 20 வயதுக்குட்பட்டோர், மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டோர் என போட்டிகள் ஸ்னாட்ச், மற்றும் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறுகிறது,  இப்போட்டிகளில் உடல் எடை பிரிவு

பெண்களுக்கு 40 கிலோ முதல் 87 கிலோ மேல் வரையும் மற்றும்

ஆண்களுக்கு 49 கிலோ முதல் 109 கிலோவிற்கு மேல் எடை வரையும்

என போட்டிகள் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் உணவகத்தில் தீ விபத்தா?!!

இப்போட்டிகளில் அதிக எடை தூக்குபவர்கள் சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இதில் திருச்சி கோவை மதுரை திருவாரூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பளு தூக்கும் வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | காரைக்காலில் துப்பாக்கி சுடும் போட்டி!