விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்!!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், நட்சத்திர வீரரான நோவாக் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சக நாட்டு வீரர் கெக்மனோவிச் உடன் மோதினார். இதில் 6-0, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜோகோவிச், 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார். இதில் 6-4, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சின்னர், 4வது சுற்றுக்கு முன்னேறினார்.